• English (United Kingdom)
  • Sinhala (Sri Lanka)
இல்லம் பிரிவுகள் நிதிப் பிரிவு

பிரிவுகளின் இன்றைய செயற்பாடுகள்

இன்று நீர் வள சபையின் செயற்பாடுகள் அடிப்படையில் குழாய் நீர்க் கிணறுகளை நிர்மாணிக்கும்போது மேற்கொள்ளப்படும் நிலக்கீழ் நீர் கண்டுபிடிப்புடன்; மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதுள்ளவாறான பல்வேறு பிரிவுகளின் செயற்பாடுகள் கீழ்க் காண்பிக்கப்பட்டுள்ளன.


இன்றைய செயற்பாடுகள்
•    நிலக்கீழ் நீர் வளத்தை மதிப்பீடு செய்தல்.
•   சிறுநீரக நோய்கள் பரம்பலடைந்து / பரம்பலடையாமல் தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களில் அதன் மீது பாதிப்புச் செலுத்தியுள்ள காரணிகளையும் அவற்றின் பிரதிவிளைவுகளையும் நிர்ணயிக்கும் பொருட்டு 3 ஆண்டு காலம் பூராகவும் சுகாதாரத் துறையிலும் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கத்தவர்கள் உள்ளிட்ட குறித்த அதிகாரபூர்வ நிறுவனங்களுடன் மிக நெருங்கிய ஒத்துழைப்பைப் பேணி கள செயற்பாட்டு ஆய்வுகளை மேற்கொள்ளல்.
•    குறுகிய கால பம்புதல் பரிசோதனைகளை மேற்கொள்ளலும் நீர் வளங்களுக்கு (குழாய் நீர்க் கிணறுகள், கிணறுகள், தூய நீர் ஊற்றுகள் முதலியவற்றுக்கு) குறித்த பாதுகாப்பான பம்பும் விகித பெறுமானங்களை நிர்ணயித்தல்.
•    நிலக்கீழ் நீர் கண்காணிப்பு வலையமைப்புகளைத் திட்டமிடலும், நீரின் தரம், நீர் மட்டம் என்பவற்றின் மீது விசேட கவனம் செலுத்தி நிலக்கீழ் நீர் கண்காணிப்பு நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்தலும்.
•    அநுராதபுரம், கொரகஹவௌவில் அமைந்துள்ள ஆராய்ச்சி, பயிற்சி மத்திய நிலையத்தில் நடாத்தப்படும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் சிவில் சமூக அங்கத்தவர்களுக்கு மத்தியில் நிலக்கீழ் நீர் வளத்துடன் தொடர்புபட்ட பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தல்.

தற்போதைய இயலளவு
1.    நீரேந்து படுகை பண்புகள், நீரேந்து படுகை வாய்ப்புகள், காலத்துடன் இசைவாக நிலக்கீழ் நீர்pன் கிடைப்பனவு தன்மையை இனங்காணும் பொருட்டு நீர்ப் புவியியல் / புவிப் பௌதிக அளவைகளை நடாத்துதல்.
2.    சிறப்பான நீரேந்து படுகைகள் மற்றும் நிலக்கீழ் நீர் வளமூலங்கள் பாயும் மாதிரிகள் குறித்த ஆய்வை மேற்கொள்ளல்.
3.    நீர்த்துறை சார்ந்த பிரச்சினைகள் மீதான சுற்றாடல் தாக்கத்தை மதிப்பீடு செய்தல்.
4.    நீரின் பண்புத்தரம் குறித்த விரிவான ஆய்வுவை மேற்கொள்ளல்.
5.    செயலமர்வுகள், கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் முதலியவற்றின்போது ஆய்வு முடிவுகளை முன்வைத்தலும் சரியிணை புத்தூக்க ஆராய்ச்சிக் கற்கைகளை வெளியிடுதலும். 
6.    நீர் வளங்கள் சார்ந்த தரவுப் பகுப்பாய்வும் உரிய பருவ அறிக்கைகளைத் தயாரித்தலும்.
7.    நிலக்கீழ் நீர் வரைபடங்களையும் நீர் இரசாயன வரைபடங்களையும் தயாரித்தல்.
8.    நிலக்கீழ் நீரை புத்துயிர்ப்பூட்டுவதுடன் தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

மாகாண அலுவலகங்கள்

அநுராதபுரம்
வடக்கு கிழக்கு மாகாணம் போன்றே, சூழவுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்குச் சேவை ஆற்றும் பொருட்டு 2007 செப்டம்பர் மாதத்தில் இந்த அலுவலகங்கள் நிறுவப்பட்டன. அதன் பிரதான பணிகளாவன:
      –    அநுராதபுரம், மாத்தளை ஆகிய மாவட்டங்களில் நீர்ப் புவிச் சரிதவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்.
      –    வரையறுத்த ஒரு வளமாகக் காணப்படும் நிலக்கீழ் நீரை மிகக் கவனமாகப் பயன்படுத்துதலும் பொருளாதார மற்றும் சமூகப் பணிகளுக்காக நீர் மாசுறாமல் பயன்படுத்துவதன்பால் மக்களைத் தூண்டுதலும்.
      –    குறிப்பாக, உலர் வலயத்தில் நீர் சார்ந்த சுகாதார உபத்திரவங்களைக் குறைப்பதற்காக அநுராதபுரம், கொரகஹவௌ பயிற்சி மத்திய நிலையத்தில் விழிப்பூட்டல் / பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல்.
      –    'ஜல சாயன' எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் சமூகத்தின் நலன் கருதி நீர் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பாக விழிப்பூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள், நீர் மாதிரிகளை பரிசோதனைக்கு உட்படுத்தல், கட்டணம் அறவிடாமல் நீர் வடிகட்டிகளை விநியோகித்தல் என்பன மேற்கொள்ளப்படுகின்றன.
      –    காட்சிப்படுத்தும் நோக்கில் போன்றே, கிராமப்புற சமூகத்தவருக்கு தொழினுட்பத்தை வழங்குவதற்காக பேண்தகு நீர் மற்றும் கமத்தொழில் மாதிரிகளை அமைத்தல்.  

பயன்படுத்தப்படும் நீரின் அளவை மட்டுப்படுத்துவதற்கும் மனிதனின் இருப்பிற்கு ஊறுவிளைவிக்கும் நீர்pன் பண்புத்தரம் குன்றுவது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் மாகாண அலுவலகம் போதுமான அளவு தயார்நிலையில் உள்ளது. குறித்த பணிக்காக கொரகஹவௌ பயிற்சி மத்திய நிலையம் உதவி அளிக்கின்றது. அது மாத்திரமன்றி, நீரைச் சுத்திகரிப்பதற்கான பாரம்பரிய முறைகள் தொடர்பாகவும் இந்த அலுவலகம் மூலம் மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

புத்தளம்
புத்தளம் பிராந்திய அலுவலகம், 1979 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்டது. சுண்ணாம்புக் கற்கள், திண் கற்பாறைகளில் காணப்படும் நிலக்கீழ் நீர் வளம் தொடர்பாக ஆய்வு செய்தல், பயன்படுத்துவதற்கு உரிய நிலக்கீழ் நீர் அபிவிருத்திச் செயற்பாடுகள் இந்த அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும். அரச / அரச சார்பற்ற அமைப்பாண்மைகளினாலும் தனியார் துறையினராலும் முடுக்கிவிடப்பட்டுள்ள பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகளுக்காக ஆழ் குழாய் நீர்க் கிணறுகளை அமைப்பதிலும் இந்த அலுவலகம் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கிராமிய நீர் வழங்கல், இறால் வளர்ப்பு, மட்டுப்படுத்தப்பட்ட நீர்ப்பாசனக் கமத்தொழில், கைத்தொழில்கள், சகல வீட்டுத் தேவைகள் என்பவற்றை நிறைவுசெய்வதும் இதில் அடங்கும். தலைமை அலுவலகத்தில் நீர்ப் புவிச்சரிதவியல் பிரிவின் முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டு பிராந்திய அலுவலகததின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மொணராகலை

நீண்ட காலமாக செயற்பாடற்றுக் கிடந்த பிராந்திய அலுவலகம் சப்ரகமுவ, ஊவா மாகாணங்களில் மக்களுக்குச் சேவை ஆற்றுவதற்காக மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளது.

நூலகம்
குறிப்பாக, நீரியல்துறை சார்ந்த, 13 வகுதிகளின் கீழ் அடங்கும் 1810 புத்தகங்களைக் கொண்ட நூலகமொன்று பேணப்பட்டு வருகிறது. இந்த நூலகம் தொடர்ந்தேர்ச்சியாக இற்றைவரைப்படுத்தப்பட வேண்டியுள்ளது.•    குறித்த பிரிவுகளின் ஆலோசனையுடன் மாதாந்த தொழினுட்ப முன்னேற்ற அறிக்கைகளைத் திரட்டுதலும், காலாண்டு செயலாற்றுகை அறிக்கைகளையும் வரைவு வருடாந்த அறிக்கையைத் தயாரித்தலும்.
•    இயந்திர பொறியியல் வேலைத்தளம் (இணைப்பு ஐஐ), புவியியல் தகவல் முறைமை (புஐளு) கூறு, நீர் வள சபையின் தலைமை அலுவலகத்தின் ஆய்வுகூடம் என்பவற்றை நுண்ணிப்பாகக் கண்காணித்தலும் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தலும்.
•    வாடிக்கைகாரர்களுடனான சிறந்த உறவைக் கட்டியெழுப்புதலும், நிலக்கீழ் நீர் அபிவிருத்தியுடன் தொடர்புபட்ட வியாபார வாய்ப்புகளை விருத்தி செய்தலும்.
•    நீர்ப் புவிச்சரிதவியல் அளவைகளும், அகழ்வு சார்ந்த நிர்மாணிப்புகளும் (டிழசநாழடந உழளெவசரஉவழைளெ) கிணறுகளைச் சுத்தம் செய்தல், பம்புதல் பரிசோதனை, நீர் மாதிரிகளின் பகுப்பாய்வு, பிற நீர்ப் புவிச்சரிதவியல் சார்ந்த அலுவல்களுக்கான மதிப்பீடுகளைத் தயாரித்தலும்.
•    வழங்கல்களைக் கண்காணித்தலும் தேவையான உபகரணங்கள், பொருள்களின் வழங்கலை உரிய முறையில் பேணிச் செல்லலும்.
•    பூர்த்திசெய்த வேலை விவரப் பட்டியல்களை நிதிப் பிரிவுக்கு அனுப்புதல்.
•    சிவில், மின்சார, குழாய்நீர் பழுதுபார்ப்புகள், நிலமாதிரி அமைப்புகள் (வீட்டுத்தோட்ட, பூங்கா வடிவமைப்பு) துப்புரவேற்பாட்டு முறைமை போன்ற மனித வள முறைமைகளை சிறந்த முறையில் பேணிச் செல்லல்.
•    அரச முகவராண்மைஃ அதிகார சபைக்காக சிறிய அளவிலான நீர்; வழங்கல் திட்டங்களை நிறுவுதல், கையேற்றல் (உதாரணமாக: பூணா கடற்படை முகாம், பாதுகாப்பு அமைச்சு, மலே வீதி, பெற்றோலியக் கூட்டுத்தாபனம் - கொலொன்னாவை, முதலீட்டுச் சபை - கொக்கலை, ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக போன்ற நிறுவனங்களின் வேலைகள் பூர்த்த செய்யப்பட்டு வருகின்றன.)

ஆய்வுகூடம்
•    இயல்பு, வெப்பநிலை, NTU அலகுகள் மூலம் நீரின் கலங்கற்றன்மைப் பெறுமானம், PH பெறுமானம்., மின் கடத்துதிறன், பூரண காரவியல்பு, மொத்த கரைந்த திண்மம், சோடியம், பொற்றாசியம், கல்சியம், மக்னீசியம், முழு இரும்புச் சத்து அளவு, புளோரைட்டு, சல்பைட், குளோரைட்டு, உவர்ப்பு, நைத்திரரேற்று அளவு முதலியவற்றின் அடிப்படையிலான இரசாயனப் பகுப்பாய்வு.
•    முழு கொலிபோம் பக்றீரியா எண்ணிக்கையும் ஈ கோலி பக்றீரியா அளவுப்படி நுண்ணியிரியியல் பகுப்பாய்வை மேற்கொள்ளலும்.
•    அந்திமணி, அலுமினியம், ஆசனிக், பேரியம், பீஸ்மத், கடமியம், குரோமியம், செம்பு, ஈயம், மங்கனீஸ், இரசம், நிக்கல், ஸ்ரோன்றியம், செலேனியம், வெள்ளி, ரின், நாகம் முதலிய பார உலோகங்கள் தொடர்பான பகுப்பாய்வை மேற்கொள்ளல்.

புவியியல் தகவல் முறைமைக் கூறு (GIS Unit)
இது, தற்போது பாரிய ஒரு நோக்கெல்லையைக் கொண்ட சிறிய ஒரு பிரிவாகும்.
•    நிலக்கீழ் நீர் ஆய்வு தொடர்பான வெளியான, வெளி அல்லாத, அதேபோல் தற்கால தரவுத் தளத்தை தரமுயர்த்தலும் இற்றைப்படுத்தலும்.
•    இன்றுள்ள தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும் எதிர்கால திட்டமிடலுக்கும் புவியியல் தரவுகளின் தொகுதிகளை உள்ளடக்கிய வரைபடங்களைத் தயாரித்தல், நிலக்கீழ் நீர் தேராய்வு, பயன்பாடு ஆகியன தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளல்.
•    இலங்கையில் அளவுசார்ந்த, பண்புத்தரம் சார்ந்த நிலக்கீழ் நீரியல் செயன்முறைகள் உருவாகும் நிலைமைகள் குறித்து பகுப்பாய்வு செய்தல்.
•    மேற்சொன்ன விடயங்களின் அடிப்படையில், இலங்கையில் நிலக்கீழ் நீர் பற்றிய காத்திரமான நிலப்பட ஏடொன்றைத் தயாரித்தல்.
•    நீர் வள சபையின் குழாய் நீர்க் கிணறுகள் குறித்த தரவுத் தளத்தை இற்றைப்படுத்தும் நோக்கில் குழாய் நீர்க் கிணறுகள் பற்றிய தொழினுட்ப ரீதியான, இரசாயன ரீதியான தரவுகளைத் திரட்டுதல்.
•    மேற்றள நீர், நிலக்கீழ் நீர் ஆகியவற்றுக்கு இடையிலான ஒன்றிய வாழ்வுத் தொடர்பு குறித்து ஆய்வு செய்தல்.
•    டிஜிட்டல் தரவுத் தளத்தைத் தரமுயர்த்துமுகமாக கடந்த 50 ஆண்டு காலத்திற்கும் கூடுதலான காலமாக மேற்கொள்ளப்படும் நிலக்கீழ் நீர் ஆய்வின் அனலொக் வரைபடங்களை டிஜிட்டல் வடிவில் ஸ்கான் செய்தல் (ளுஉயnniபெ)
•    நீர் வள சபையின் (றுசுடீ) இணையத் தளத்தை வடிவமைத்தலும் இற்றைப்படுத்தலும்.

இரத்மலானை தொழிற்சாலை
இது, தற்போது பாரிய ஒரு விடயப் பரப்பெல்லையைக் கொண்ட சிறிய ஒரு பிரிவாகும்.
•    நிலக்கீழ் நீர் ஆய்வு தொடர்பான வெளியான, வெளி அல்லாத, அதேபோல் தற்கால தரவுத் தளத்தை தரமுயர்த்தலும் இற்றைப்படுத்தலும்.
•    இன்றுள்ள தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும் எதிர்கால திட்டமிடலுக்கும் புவியியல் தரவுத் தொகுதிகளை உள்ளடக்கிய வரைபடங்களைத் தயாரித்தல், நிலக்கீழ் நீர்; ஆய்வு, பயன்பாடு ஆகியன தொடர்பான தீர்;மானங்களை மேற்கொள்ளல்.
•    இலங்கையில் அளவுசார்ந்த, பண்புத்தரம் சார்ந்த நிலக்கீழ் நீரியல் செயன்முறைகள் உருவாகும் நிலைமைகள் குறித்து பகுப்பாய்வு செய்தல்.
•    மேற்சொன்ன விடயங்களின் அடிப்படையில், இலங்கையில் நிலக்கீழ் நீர் பற்றிய விரிவான வரைபட நூலொன்றைத் தயாரித்தல்.
•    நீர் வள சபையின் குழாய் நீர்க் கிணறுகள் குறித்த தரவுத் தளத்தை இற்றைப்படுத்தும் நோக்கில் குழாய் நீர்க் கிணறுகள் பற்றிய தொழினுட்ப ரீதியான, இரசாயன ரீதியான தரவுகளைத் திரட்டுதல்.
•    மேற்பரப்பு நீர், நிலக்கீழ் நீர் ஆகியவற்றுக்கு இடையிலான உயிரியல் ரீதியான தொடர்பு குறித்து ஆய்வு செய்தல்.
•   டிஜிட்டல் தரவுத் தளத்தைத் தரமுயர்த்துமுகமாக கடந்த 50 ஆண்டு காலத்திற்கும் கூடுதலான காலமாக மேற்கொள்ளப்படும் நிலக்கீழ் நீர் ஆய்வின் அனலொக் வரைபடங்களை டிஜிட்டல் வடிவில் ஸ்கான் செய்தல் (ளுஉயnniபெ)

துளையிடு பிரிவு
•    ஆழ் குழாய் நீர்க் கிணறுகளை அமைத்தல்.
•    குழாய் நீர்க் கிணறுகளுக்கான கைப் பம்பிகள் / ஆழ்த்தக்கூடிய பம்பிகளை நிறுவுதல்.
•    குழாய் நீர்க் கிணறுகளைப் புனர் நிர்மாணம் செய்தலும்
•    நீர்ப் புவிச்சரிதவியல்; பிரிவின் ஒத்துழைப்புடன் சிறிய நீர் வழங்கல் திட்டங்களுக்கான குழாய் பரப்பி இணைத்தல்.
•    துளையிடு உபகரணங்களையும் கொம்பிரசர்களையும் திருத்துதலும் பராமரித்தலும்.
•    இரத்மலானை தொழிற்சாலையின் ஆலோசனையுடன் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.•    பணியாள் தொகுதியின் ஆட்சேர்ப்புகளைத் திட்டமிடுதல், வரவு, விடுமுறை, சம்பள ஏற்றம், ஊழியர் சேமலாப நிதிய, ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதிய பங்களிப்புகள், ஓய்வுபெறல், ஓய்வூதிய நன்மைகளுடன் தொடர்பான நடவடிக்கைகளைப் பேணிச் செல்லல், ஆள்சார் கோப்புகள், புலமைப்பரிசில்கள், பயிற்சி வாய்ப்புகளுடன் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளல், ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளல், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல்; முதலிய பணிகள் தொடர்பில் பொறுப்பு வகிக்கின்றது.
•    நிதிப் பிரிவின் மேலொப்பத்துடன் உழைத்துப் பயன்படுத்தும் பற்றுச்சீட்டுகளை (மின்சார, தொலைபேசி, நீர், வாடகை முதலிய) தீர்ப்பனவு செய்தல்.
•    அஞ்சல் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
•    அலுவலக உபகரணங்களைப் பராமரித்தல்.
•    நலனோம்புகை நடவடிக்கைகள்.
•    தொழிற்சங்க நடவடிக்கைகள்.
•    ஊழியர் காப்புறுதி.•    வருடாந்த வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தலும் வரவு செலவுத் திட்ட முகாமையும்.
•    வருடாந்த கணக்குகளைத் தயாரித்தல்.
•    நீர் வள சபையினால் அனுமதிக்கப்பட்ட கொடுப்பனவுகளை அமுல்படுத்தல்.
•    கிரய அலகொன்றைப் பேணிச் செல்லல்.
     –    நீர்ப் புவிச்சரிதவியல், துளையிடல் செயற்பாடுகள், கணக்குப் பிரிவுகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய கிரய அலகு பின்வரும் விடயங்கள் தொடர்பில் பொறுப்பு வகிக்கின்றது
     –    கிரய மதிப்பீடுகளைத் தயாரித்தல்.
     –    உள்ளபடியான கிரயத்தையும் ஒவ்வொரு பணி / கருத்திட்டத்திற்கான இலாப நட்டக் கணக்குகளையும் பேணிச் செல்லல்.

•    கணக்காய்வு விசாரணைகளுக்கான பதில் அளித்தல்.•    பெறுகை
•    களஞ்சியசாலை பராமரிப்பு

Last Updated (Friday, 02 October 2009 08:36)